தாயின் தகாத உறவால் தெருவில் நிற்கும் பிள்ளைகள்...
மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்த 66.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்வேந்தன்...
35 வயதான இவர், மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த முத்துப்பிள்ளை என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்...
பொன்வேந்தன் சொந்தமாக கால் டாக்ஸி ஓட்டி வந்த நிலையில், அவரின் மனைவி முத்துப்பிள்ளை பாலமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்திருக்கிறார்...
தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்... இந்நிலையில், முத்துப்பிள்ளை பல ஆண்களுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது..
இதனையறிந்த பொன்வேந்தன் மனைவியை தொடர்ந்து கண்டித்தும் வந்திருக்கிறார்...
மனைவியை கண்டுபிடித்து தருமாறு கூறி, பாலமேடு காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலை இந்த சூழ்நிலையில், பொன்வேந்தனுக்கு சென்னையில் கால் டாக்ஸி ஓட்டும் வேலை கிடைத்திருக்கிறது..
இதனால் சென்னை விரைந்த பொன்வேந்தன், 15 நாள்களுக்கு ஒரு முறைதான் சொந்த ஊர் வந்து செல்வதாக கூறப்படுகிறது..
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் முத்துப்பிள்ளை தகாத உறவில் இருந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது, பொன்வேந்தனை மனமுடைந்து போக செய்திருக்கிறது..
அதிர்ச்சியில் வீடு திரும்பிய பொன்வேந்தன், காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகாரளித்திருக்கிறார்...
நபரின் 3 மகன்களும் தந்தையை இழந்து தெருவில் நிற்கும் சோகம் புகாரில் காவல்துறை மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக கூறப்படுகிறது..
இதனால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பொன்வேந்தன், பாலமேடு காவல்நிலையம் விரைந்து, தன் மனைவியை உடனே கண்டுபிடித்து தரக்கோரி மன்றாடிய நிலையில், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
மதுரை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த பொன்வேந்தன், இறக்கும் தருவாயில்... நிர்கதியாய் தவிக்கும் தன் 3 மகன்களையும் சகோதரியிடம் ஒப்படைத்து விடும்படி கூறியது உறவினர்களின் மனதை ரணமாக்கி இருக்கிறது...
காதல் திருமணம்... 3 மகன்கள்... வாடகை கால் டாக்ஸியில் இருந்து சொந்தமாக கால் டாக்ஸி வாங்கும் அளவிற்கு உயர்ந்த செல்வாக்கு... என அத்தனையையும் தன் தகாத உறவு மோகத்தால் சிதைத்து... ஒரு உயிரையும் எடுத்து... 3 குழந்தைகளை தாய் தெருவில் விட்டிருக்கும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...