ரோட்டில் புதைந்த பஸ் டயர்... நேர இருந்த விபரீதம்... தப்பிய மக்கள்... பதற வைக்கும் காட்சி

x

மதுரை வைகை வடகரை மதிச்சியம் பகுதியில் சாலையின் நடுவே தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பணிக்கான குழி முறையாக மூடப்படாததால் குழியில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது...

சாலையின் நடுவே பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் ஒன்று 15 நாட்களுக்கு முன்பாக தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. சரியாக மூடப்படாத அந்தப் பள்ளத்தில் தேவகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற சக்கரம் சிக்கியது... சாமர்த்தியமாக ஓட்டுநர் கையாண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 10 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட பள்ளத்தில் 3 அடிக்கு பேருந்தின் சக்கரம் பதிந்திருந்தது... பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்... கிரேன் மூலம் பள்ளத்தில் சிக்கி இருந்த பேருந்து மீட்கப்பட்டது...

அந்தப் பள்ளத்தைச் சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டு மணல் போட்டு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்