ஜல்லிக்கட்டில் அதிரடி மாற்றம்... களமிறங்கிய `பரம்பரை' டீம்... அனல் பறக்கும் அவனியாபுரம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முதல்முறையாக தண்டவாள வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 14ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பரம்பரை வாடிவாசல் அமைப்பாளர்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வழக்கமாக அமைக்கப்படுவது போல் இல்லாமல், இந்த முறை தண்டவாளத்தை போல நேராக செல்லும் தண்டவாள வாடிவாசல் அமைக்கப்பட்டு வருகிறது. 10 அடி மற்றும் 8 அடி உயரமுள்ள தென்னை மரங்கள் சுற்றிலும் பாதுகாப்பாக நடப்பட்டு, அதன் பின் வாடிவாசல் கதவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதேபோல், தடுப்பு வேலிகள், மாடுகள் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.
Next Story