மதுரை AIIMS கட்டுமானத்தின் அப்டேட்..! ஆர்டிஐ-யில் வெளியான தகவல்

x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்டிஐ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு 2015-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு, மதுரை தோ​ப்பூரில் 2018-ம் ஆண்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், 2019-ம் ஆண்டில் கட்டுமான பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர், ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள எய்ம்ஸ் மத்திய பொது தகவல் அலுவலர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்சுக்கான திட்ட மதிப்பீடு 2 ஆயிரத்து 21 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.18 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாகவும், தற்போது, திட்ட அலுவலகம் உள்ளிட்ட தற்காலிக கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆர்டிஐ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்