போலீசுக்கு குட்டு வைத்த ஐகோர்ட் மதுரை பெஞ்ச்

x

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமின் மறுத்துள்ள நிலையில், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக உள்ள வெண்ணிலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக

பதிவாளராக கடந்த ஜனவரியில் பொறுபேற்ற ராமகிருஷ்ணன் என்பவர் தனக்கு பாலியல் அச்சுறுத்தல் அளித்து வந்ததாக கூறியுள்ளார். தனது புகைப்படத்தை மார்பிங் செய்தும், அலைபேசி மூலமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். உயர்கல்வித்துறை செயலரிடம் புகார் அளித்த பின் பதிவாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் திருமங்கலம்

அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்

தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமின் மறுத்துள்ள நிலையில், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 20க்கு ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்