தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை - வெளிவந்த முக்கிய தகவல்
காதல் திருமணம் செய்த பெண்ணை, பெற்றோரே ஆணவக் கொலை செய்த வழக்கில், பெண்ணின் உறவினர்களான மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்த நிலையில், அவரின் பெற்றோராலையே கொலை செய்யப்பட்டு, உடல் எரித்து சாம்பலாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கு விசாரணையில், பெண்ணின் பெற்றோர் உட்பட உறவினர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 3 உறவினர்களை கைது செய்திருக்கின்றனர். பெண்ணின் உறவினர்களான ரெங்கசாமி, பிரபு மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த கொலை வழக்கின் கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
Next Story