காதல் திருமணம்...மூன்றே மாதங்களில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

x

ஆட்டூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது உதய பிரகாஷ் திருத்துறைப்பூண்டி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்... இவர் நாகையைச் சேர்ந்த ஹேமா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஆட்டூர் பகுதியில் அவரது வீட்டின் அருகே உள்ள சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவரும் நேற்று இரவு ஒரே அறையில் தூங்கிய நிலையில் அதிகாலையில் உதயபிரகாஷ் எழுந்து பார்த்தபோது மனைவி ஹேமா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள புளிய மரத்தில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்