காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு... ரயில்முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். நல்லமநாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகே ரயிலில் அடிபட்டு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை, ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், என்.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கராஜ்- லட்சுமி தம்பதியரின் 2வது மகன் மூர்த்தி என்பது தெரியவந்தது. மூர்த்தி, அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், வேறு சமூகம் என்பதால் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மூர்த்தி,​கொல்லத்திலிருந்து இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்