திருமணம் செய்வதாகக்கூறி பெண் ஏமாற்றியதால் தற்கொலை

x

சென்னை கொருக்குப்பேட்டையில், திருமணம் செய்ய பெண் மறுத்ததால், அவரது செல்போன் நம்பரை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் 2வது தெருவைச் சேர்ந்த 24 வயதாகும் பிரேம்குமார், சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு,

ஏற்கனவே திருமணமான கொருக்குப்பேட்டை கார்னேஷன் நகர் பகுதியை சேர்ந்த பவானி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் விவாகரத்து பெறப்போவதாக பவானி கூறியதை அடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பவானி வேறொரு நபருடன் ஒன்றாக இருப்பதுபோல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதுகுறித்து பிரேம்குமார் கேட்டபோது, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இருப்பவரை திருமணம் செய்யப்போவதாக பவானி கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேம்குமார், பவானியின் செல்போன் எண்ணை பதிவிட்டு ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு,

பிளாஸ்டிக் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிரேம்குமாரின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகனின் தற்கொலைக்கு காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் தாயார் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்