காதல் விவகாரத்தில் கண்டிப்பு - 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரில், பவானி என்பவர் மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். பள்ளியில் பயின்ற போது பவானியின் மகளும், வசந்த் என்பவரும் காதலித்ததாக கூறப்படும் நிலையில், அதனை கண்டித்த பவானி, சிறுமியை வியாசர்பாடியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சிறுமி காதலனுடன் செல்போனில் பேசிய படி இருந்ததால் ஆத்திரமடைந்த அவரது பாட்டி, செல்போனை வாங்கி கொண்டதுடன், சிறுமியை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்பிய மூதாட்டி, வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியே பார்த்த போது, சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story