அப்பாவி உயிர்களை கொடூரமாய் பறித்த சிறுத்தை - வனத்துறை எடுத்த குட் மூவ்
ஒசூர் அருகே பிடிபட்ட சிறுத்தை, தமிழக-கர்நாடகா எல்லை வனப்பகுதியில் விடப்பட்டது. அடவிசாமிபுரம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் தெருநாய்களை சிறுத்தை தாக்கி சாப்பிட்டது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், மக்களை அச்சுறுத்தி வந்த ஆண் சிறுத்தை வனத்துறையினரின் கூண்டுக்குள் சிக்கியது. தொடர்ந்து சிறுத்தையை ஜவளகிரி அடுத்துள்ள சென்னமாலம் வனப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பாக விடுவித்தனர். சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story