ஒரே ஒரு எலுமிச்சை பழம்... ரூ.5.9 லட்சத்திற்கு ஏலம்..! இப்படி ஒரு சிறப்பா..? தெய்வீக பின்னணி
தைப்பூசத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப்பூச நாட்களில் 3 தினங்கள் பழனியில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் 3 நாட்களும், அவர்கள் அன்னதானம் வழங்கும் போது பூஜையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் 16,000 முதல் 40,000 ரூபாய் வரை ஏலம் போனது. ஏலத்தின் இறுதியாக தைப்பூச தினத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு எலுமிச்சம் பழத்தை பக்தர் ஒருவர் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
Next Story