தமிழக IT ஊழியர்களை கதிகலங்க விட்ட திடீர் Layoff - செய்வதறியாமல் வீதிக்கு வந்து புலம்பும் ஊழியர்கள்

x

கோவையில் இயங்கி வந்த அமெரிக்க நிறுவனம் திடீரென்று மூடப்பட்டதை அடுத்து, அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் திரண்டனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன், ஊதியம், அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உதவி தொழிலாளர் நல ஆணையரிடம் நடந்த பேச்சுவார்த்தையில், வரும் 31-ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் எனவும் பி.எஃப். தொகை முழுமையாக ஒப்படைக்கப்படும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. அடுத்த மூன்று மாதத்திற்கான சம்பளம் குறித்து மீண்டும் வரும் 31-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்