மொத்த தமிழக வக்கீல்களையும் பீதியாக்கிய கொலையில் திடுக் திருப்பம்.. நடுங்கவைக்கும் பின்னணி
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவிலில் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி என்பவர் கொன்று எரித்த வழக்கில் இசக்கிமுத்து என்பவர் போலீசில் சரண் அடைந்தார். சொத்து பிரச்சினையை தீர்க்க தங்கள் குடும்ப வழக்கறிஞராக செயல்பட்ட அவர், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு எதிர் தரப்போடு சேர்ந்ததால் கொலை செய்ததாக இசக்கி முத்து வாக்குமூலம் அளித்தார். அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாழைக்கன்று கேட்ட வழக்கறிஞர் கிறிஸ்டோபரை தோட்டத்திற்கு அழைத்ததும், அங்கு சகோதரன் தளவாய் மற்றும் அவரது நண்பர்களோடு சேர்ந்து வழக்கறிஞரை வெட்டி கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது. அங்கிருந்து உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று சந்தியான் குளக்கரையில் வீசி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து தளவாய் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.