இந்தியாவில் வரப்போகும் `2025’ புது சட்டம் - "இனி யாரும் தப்பவே முடியாது"

x

இந்தியாவில் வரப்போகும் `2025’ புது சட்டம் - "இனி யாரும் தப்பவே முடியாது"

இந்தியாவுல போலி பாஸ்போர்ட்,போலி விசா பயன்படுத்தினா 7 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்னு தெரிவிக்கப்பட்டிருக்கு.

இது தொடர்பா குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025ங்கர புது மசோதாவ மார்ச் 11ம் தேதி மக்களவவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனா இன்னும் இந்த மசோதா நிறைவேத்தப்படல.

இந்தியால குடியேறுறதுக்கும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்கள கையாளவும் 4 சட்டங்கள் இப்ப அமல்ல இருக்கு.

பாஸ்போர்ட் சட்டம்,1920 - இந்தியாக்குள்ள நுழையரதுக்கு பாஸ்போர்ட் கட்டாயபடுத்தவும்,பாஸ்போர்ட் வழங்க சில கட்டுப்பாடுகள விதிக்கவும்,உரிய வழிமுறைகள மீறுபவர்கள் மேல அபராதங்கள் விதிக்கவும் வகை செய்யறது தான் இந்த சட்டம்.

வெளிநாட்டினர் பதிவு சட்டம்,1939 - இந்தியாவுக்கு வந்து,தங்கி,வெளியேறுன வெளிநாட்டினரபதிவு செய்ய வகைசெய்யும் சட்டம் தான் இது.

வெளிநாட்டினர் சட்டம் 1946 - இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கு.இந்தியால வெளிநாட்டினரின் விவகாரங்கள் தொடர்பா இந்திய இடைக்கால அரசுக்கு சில அதிகாரங்கள வழங்க இயற்றப்பட்ட சட்டம் இது.

குடியேற்ற சட்டம்,2000 - இந்தியாவுக்கு உரிய ஆவணங்கள் இல்லாம வரக்கூடியவங்கள அழச்சுட்டு வர போக்குவரத்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம்.

...........................................................................

இப்ப புதுசா தாக்கல் செய்யப்படிருக்க மசோதால, ஏற்கனவே அமல்ல இருக்கற 4 சட்டங்களோட அம்சங்கள் மட்டுமிலாம இப்ப இருக்கற சூழலுக்கு ஏற்ப புது அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கு. ஆனா குடியுரிமை தொடர்பா எந்த அம்சமும் இடம்பெறல.அதே நேரம் இந்தியால சட்டவிரோதமா குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுதுநு சொல்லப்படுது. அந்த வகையில

இந்தியால நுழையவும், தங்கவும், வெளியேறவும் போலி பாஸ்போர்ட், போலி விசாவையோ இல்ல முறைகேடா பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்துனா, 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்நு சொல்லப்பட்டிருக்கு. அதோட ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

உரிய பயண ஆவணங்கள் இல்லாம நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் சிறை,5 லட்சம் அபராதம்

மத்திய உள்துறை அமைச்சகத்தோட தரவு படி,ஏப்ரல்1,2023 ல இருந்து மார்ச் 31,2024 வரைக்கும் இந்தியாவுக்கு 98 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டினர் வந்திருக்காங்க. இந்த நிலையில தான் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவல உணவகங்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் , நர்சிங் ஹோம்கள் தெரிவிப்பது கட்டாயமாக்கப்படுது. இதுமூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்

விமானம் மற்றும் கப்பல்கள்ள வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியமாக்கப்படுது. இதுமூலமா வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிது


Next Story

மேலும் செய்திகள்