"உங்க அம்மாவ கொன்னா தான் நீ வருவ.." - HIV பாதித்த மாமியாரை குத்திக் கிழித்த மருமகன்.. கதறிய மனைவி
மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால ஆத்திரத்துல மாமியார குத்திக் கொலை பன்ணி இருக்காரு ஒரு கொடூர மருமகன் ,நோய்வாய் பட்ட தாய்க்கு உதவியாக இருந்த மகள் மீது உண்டான கோவம் தான் கொலைக்கு கரணமா..?
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்துள்ளது விஸ்வநத்தம் பகுதி, தீப்பெட்டி போல நேர்த்தியாக அடுக்கி இருந்த ஒண்டிக்குடித்தன வீட்டில் தான் அறங்கேறி இருக்கிறது அந்த பயங்கரம். உடம்புக்கு முடியாமல் நோய் வாய்ப்பட்டிருந்த பெண்ணை , கத்தியால் குத்தி கிழித்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறார் ஒரு கொடூர கொலைகாரன்.
தாயை ரத்த வெள்ளத்தில் பார்த்த மகள் கதறி அழுது கொண்டிருக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பெட்ஷீட்டில் சுற்றப்பட்ட பெண்ணின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கனத்த இதயத்தோடு நின்றிருந்த பெண் போலீஸாரிடம் நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தார். கொல்லப்பட்டவர் வீரமணி. 47 வயதான இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
கனவனை இழந்த நிலையில், வீரமணி ஒன்டிக்கட்டையாக பட்டாசு ஆலையில் வேலை பார்த்து இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்திருக்கிறார்.
மகன் பள்ளியில் படித்துவரும் நிலையில், மகள் மாரீஸ்வரி பஞ்சலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.அப்போது தனது தோழியின் மூலமாக அறிமுகமானவர் தான் காளிதாஸ்.
ராமநாதபுரத்தை சேர்ந்த காளிதாஸ், மாரீஸ்வரியுடன் பணியாற்றிய தோழியின் உறவினர்.இதனால் மியூச்வல் ஃபிரண்டாக இணைந்த காளிதாஸ் மாரீஸ்வரியிடம் அடிக்கடி செல்ஃபோனில் பேசி ,காதல் வளர்த்திருக்கிறார். இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக மாறி இருக்கிறார்கள்.
காதல் திருமணத்திற்கு பின் இருவரும் தனிக்குடித்தம் சென்றிருக்கிறார்கள்.
இரண்டு வருட காதல் திருமண வாழ்கை இனிமையாகவே நகர்ந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் தான் சில மாதங்களாக காளிதாஸின் நடவடிக்கை மாரீஸ்வரிக்கு பிடிக்கவில்லை. இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து மோதல் வெடித்திருக்கிறது.
இந்த சூழலில் அந்த மோதலை அதிகப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வீரமணி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. அடிக்கடி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
இதனால் மனம் கேட்காத மகள் மாரீஸ்வரி அடிக்கடி தாயை வந்து பார்த்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, தேவையான உதவிகளை செய்வது என ஒத்தாசையாக இருந்திருக்கிறார்.
இது காளிதஸுக்கு இன்னும் ஆத்திரத்தை அதிகரிக்க செய்திருக்கிறது. அம்மாவை பார்க்க போகக்கூடாது என மாரீஸ்வரியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில், அம்மா தான் முக்கியமென சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய மாரீஸ்வரி தாய் வீட்டில் தங்கி அவரை பராமரித்து வந்திருக்கிறார்.
இதனால் கொலை வெறியின் உச்சிக்கே சென்ற காளிதாஸ், மாமியாரை ஒரே அடியாக தீர்த்துக்கட்டினால் தான் தனது குடும்பம் ஒன்றாக முடியும் என முடிவெடுத்திருக்கிறார்.
அதன்படியே சம்பவத்தன்று மாமியாரின் வீட்டிற்கு வந்த காளிதாஸ் அங்கு தனியாக இருந்த வீரமணியை கொடூரமாக குத்தியும் வெட்டியும் சிதைத்துவிட்டு தப்பித்து ஓடி இருக்கிறார்.