UPSC தேர்வில் சாதித்த குன்றத்தூர் நகராட்சி ஆணையர் | நெகிழ்ச்சியுடன் பேசிய கவின்மொழி
பிரபல எழுத்தாளர் வெண்ணிலாவின் மகளும், குன்றத்தூர் நகராட்சி ஆணையருமான கவின்மொழி, இந்திய குடிமைப் பணித் தேர்வில் 546-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இது குறித்து பேசிய கவின் மொழி, தனது சிறுவயது கனவு நனவானதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஊக்கத்தால் இந்த கடினமான தேர்வுக்குத் தயாரானதாகவும் அவர் கூறினார். UPSC தேர்வில் வெற்றி பெற்ற அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Next Story
