``வாய பொத்தி; அடிச்சாங்க சார்..'' - கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் - காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ்
கும்பகோணம் அருகே, வரதட்சணை கேட்டு கர்ப்பிணிப் பெண் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருநாகேஸ்வரம் பகுதியில் வசித்த புகழேந்தி என்பவருக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணமானது. அவர் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரை வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக துன்புறுத்தி, கணவர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்துப் பேசி வீட்டிற்குச் சென்ற நிலையில், மீண்டும் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் மயிலாடுதுறையில் வசிக்கும் தனது தாயாருக்கு இலக்கியா தகவல் கொடுத்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Next Story