பொண்டாட்டி பிள்ளைகளை மறந்து உல்லாசம்.. கள்ளக்காதலில் இருந்த கணவன் தலையில் விழுந்த அம்மிக்கல்
பொண்டாட்டி பிள்ளைகளை மறந்து உல்லாசம்.. கள்ளக்காதலில் இருந்த கணவன் தலையில் விழுந்த அம்மிக்கல் - மனைவி செய்த கோர சம்பவம்
கும்பகோணத்தில் உள்ளது ராமகிருஷ்ணா நகர்.
நள்ளிரவில் நடந்த ஒரு பயங்கரத்தால் மொத்த ஏரியாவும் மாயான அமைதியில் கிடக்கிறது.
ரத்தம் ஆறாக பெறுக்கெடுத்து ஓடிய வீட்டில் போலீஸார் விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.
தூங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவியே கொலை செய்த கொடூர சம்பவம் குறித்த காட்சிகள் தான் இவை அனைத்தும்.
கொல்லப்பட்டவர் அன்பரசன், திருபுவனம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை நடந்தது வந்தது, அக்கம் பக்கத்தினர் கூட அறிந்த உண்மை.
அன்பரசன் ஆக்ரோசமானால் கலைவாணியின் நிலை கவலைக்கிடமாகி விடுவது வழக்கம்.
அடி உதை, வாய் தகராறு என அனு தினமும் சண்டை சச்சரவுகளால் சிதைந்திருந்திருக்கிறது அந்த குடும்பம் .
இந்த நிலையில் தான், சம்பவத்தன்று நள்ளிரவில், கலைவாணி அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் ஒரு பகீர்
செய்தியை கூறி இருக்கிறார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துவிட்டதாக அவர் சொன்னதை
முதலில் யராலும் நம்ப முடியவில்லை.
அச்சத்தோடு அன்பரசனின் வீட்டிற்கு ஓடிச் சென்ற பொதுமக்கள், உள்ளே ரத்தவெள்ளத்தில் பினமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் பறந்ந்திருக்கிறது.
விரைந்து வந்த போலீஸார் சடலத்தை உடற்கூறாவிற்காக அனுப்பி வைத்துவிட்டு, கலைவாணியை கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் அன்பரசனின் கள்ளக்காதல் மனைவியை கொலைகாரியாக மாற்றி இருப்பது தெரியவந்திருக்கிறது.
திருபுவணம் பேக்கரியில் வேலை செய்து வந்த அன்பரசனுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, அன்பரசன் கட்டிய மனைவி, பிள்ளைகள் அனைவரையும் மறந்து, ரகசிய காதலியோடு நாட்களை கழித்திருக்கிறார்.
பல நாட்களாக பொத்தி வைத்து வளர்த்த ரகசிய கதை ஒரு கட்டத்தில் காற்றில் கசிய, அது கலைவாணியின் காதுக்கும் வந்திருக்கிறது.
கணவனின் இந்த தகாத செயலை கண்டித்த கலைவாணி , கள்ளக்காதலை கைவிடச் சொல்லி போராடி பார்த்திருக்கிறார். ஆனால் கலவாணியின் அபலைக்குரல் அன்பரசின் செவிகளுக்குள் நுழையவில்லை.
இதனால் இருவருக்கும் இடையில் இருந்த விரிசல் முற்றி இருக்கிறது.
சம்பவத்தன்றும் வழக்கம் போல அதே புராணம் தான்.
சம்பந்தப்பட்ட பெண்ணோடு பழகக் கூடாது என கலைவாணி வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை போர் வெடித்திருக்கிறது.
அப்போது ஆத்திரமடைந்த கலைவாணி வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து அன்பரசனின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்.
இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத அன்பரசன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயிருக்கிறார்.
சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார் கலைவாணியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
கனவன் மனைவியில் இருவரில் ஒருவர் சரி இல்லை என்றாலும், குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கும். அப்படித்தான், அன்பரசனின் குழந்தைகள் தற்போது இருவரின் அரவனைப்பையும் இழந்து நிற்கிறார்கள்