பிணமாக கிடந்த இரு வட மாநிலத்தவர்...புரியாத புதிரை உடைத்த மோப்ப நாய்

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள தனியார் நூற்பாலையில், ஒடிசாவை சேர்ந்த துபலேஷ் மற்றும் முன்னா என்ற 2 நபர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கல்லால் தாக்கப்பட்ட காயங்களுடன், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் ஏற்கனவே இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததும், துபலேஷ் தாக்கியதில் முன்னாவுக்கு கை முறிவு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. தற்போது இருவரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மோப்ப நாயானது அருகிலுள்ள மதுக்கடை வரை சென்றுவிட்டு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கோஷ்டி மோதலிலோ அல்லது மது போதையிலோ வேறு யாரேனும் இருவரையும் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்