"இது நடந்தால் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி எகிறும்" - போராட்டத்தில் குதித்த மக்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் விவசாய நிலங்கள் வீட்டுமனை நிலங்களாக மாறிவிடும் என மக்கள் குற்றஞ்சாட்டுவதோடு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உயர்ந்து விடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததால், 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story