மனமுடைந்து நின்ற மாணவர்கள் - கொடுத்த உறுதியை நிறைவேற்றிய ஆட்சியர்
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் பூமாலை, பூசணிக்காயுடன் புகாரளிக்க வந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பெரியகுத்தி, ராமன்தொட்டி, கமலகொண்டகொத்தூர் கிராம மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக புதிய அரசு பஸ் ஒன்று விடப்பட்டது. இன்று காலை புதிய பஸ் வருவதை அறிந்த மாணவர்கள் பூமாலை, பூசணிக்காய், இனிப்புகளுடன் பஸ்சை வரவேற்க காத்திருந்தனர். ஆனால், பஸ்சை தொடங்கி வைப்பதில் கட்சிக்காரர்கள் இடையே ஏற்பட்ட தகராறால் வந்த பஸ் பாதியிலேயே திரும்பி சென்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கையில் மாலை, பூசணிக்காயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story