அதிகாலையில் கேட்ட சத்தம் - விடிந்ததும் ரத்த வாடை.. கதவை திறந்தவருக்கு காத்திருந்த ஷாக் | Krishnagiri
பர்கூர் அருகே நிதி நிறுவன உரிமையாளரை கத்தியால் தாக்கி 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த தண்ணீர் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிகாலை மர்ம நபர்கள் சிலர் சுந்தரேசன் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்த அவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் சுந்தரேசனுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story