6 மாதமாகியும் திறக்காத கட்டடம்..கிருஷ்ணகிரி மக்கள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே மத்தூரில் 20 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு 6 மாதங்கள் ஆகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது அது ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், எனவே சுற்றுச்சுவர் அமைத்து சுகாதார நிலைய கட்டிடத்தை பாதுகாக் வேண்டும் என கோருகின்றனர்.
Next Story