"நடிக்கிறேனு சொல்றாங்க.. நாங்க எங்க சார் போறது" கையில் குழந்தையுடன் கலெக்டரிடம் கண்ணீர் விடும் நபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடையே மனுக்களை பெற்றார். அப்போது சந்தூர் அடுத்த அனகோடி கிராமத்தை சேர்ந்த செந்தமிழ் என்பவர் தாம் குடியிருந்து வரும் நிலத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறி தங்களை வீட்டை விட்டு வெளியேற கூறி அதிகாரிகள் வற்புறுத்துவதாக மனு அளித்தார். மேலும், தனது வாக்களர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை அவர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
Next Story