பக்கத்து வீட்டில் மலர்ந்த நட்பால் வந்த போட்டோக்கள்.. இளம்பெண்னை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்
கிருஷ்ணகிரியில் நட்பாக பழகும்போது எடுத்த போட்டோக்களை வைத்து மிரட்டி, இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்த குடும்பஸ்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் முபாரக். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் மூன்று வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், முபாரக் பக்கத்து வீட்டில் உள்ள 19 வயது பெண்ணுடன் நட்பாக பழகியுள்ளார். அப்போது இருவரும் பல போட்டோக்களை எடுத்ததாக தெரிகிறது. அந்த போட்டோக்களை வைத்து மிரட்டி, 19 வயது இளம்பெண்ணை முபாரக், பாலியல் வன்முறை செய்துள்ளார். இதனால், இளம் பெண் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் இளம் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், முபாரக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story