``ஹலோ.. தீபா.. தீபா.. பயப்படாத.. நான் வந்துட்டே இருக்கேன்'' - மறுவார்த்தை பேசும் முன் இறங்கிய கத்தி

x

கஞ்சனூரை சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கு 32 வயது ஆகிறது. இவரது கணவர் இறந்துவிட்டார். 12 வயதில் மகனும் 10 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தீபா, வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு நபர்கள் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதுகுறித்து தீபா, தனது நண்பர் கவுதமுக்கு தகவல் கொடுத்துள்ளார். கவுதமும் தீபா இருக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மீண்டும் தீபாவிடம் இருந்து போன் வந்தது. ஆனால் போனில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மிதுன் என்பவர் பேசினார். அவர் பேசும் போதே தீபாவின் அலறல் சத்தமும் கேட்டது. இதனால் பதற்றம் அடைந்த கவுதம், விரைந்து சென்று பார்க்கையில், தீபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனையடுத்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே தீபா உயிரிழந்தார். தற்போது தீபாவின் போனில் பேசிய தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மிதுனுக்கு போலீசார் வலை வீசி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்