அடம்பிடித்து ஒரே இடத்தில் நின்ற காட்டு யானை..வனத்துறை எடுத்த முடிவு - பரபரப்பு காட்சிகள்
அடம்பிடித்து ஒரே இடத்தில் நின்ற காட்டு யானை..வனத்துறை எடுத்த முடிவு - பரபரப்பு காட்சிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ராகி தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் மரக்கட்டா மற்றும் மட்ட மத்திகிரி கிராமங்கள் அருகே, விவசாயிகள் பயிரிட்டிருந்த ராகி பயிர்களை சேதப்படுத்தின. இதையடுத்து, காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், கிரி என்ற காட்டு யானை மட்டும் அங்கேயே நின்றது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து கிரி யானையை விரட்டினர்.
Next Story