படையெடுத்து வந்த காட்டு யானைகள் - கிராம மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு கர்நாடக காட்டு யானைகள் இடம்பெயர்ந்ததால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்... கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து 80க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்துள்ளன... பல்வேறு குழுக்களாக பிரிந்த இந்த காட்டு யானைகளில் 20க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து உடேதுர்க்கும் வனப்பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ளன. இந்த காட்டு யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவதால் அருகில் உள்ள நாகமங்கலம், யூ.புரம், கடூர், வரகானப்பள்ளி, பேவநத்தம் ஆகிய சுற்று வட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்