“காலால் ஒரே உதை.. “ அசால்ட்டாக பைக்கை திருடி சென்ற மர்ம நபர்கள் - அதிர்ச்சி சிசிடிவி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது வடமலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி, தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், காலையில் அந்த வாகனத்தை காணாததால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் முன்பு பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் முகத்தை மறைத்தப் படி , இரு சக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்