ஒரே நாளில் எதிர்பாரா சரிவு - குஷியில் இல்லத்தரசிகள்
குறிப்பாக முருங்கைக்காயின் விலை கிலோ 400 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது... இந்த நிலையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக தற்பொழுது முருங்கைக்காயின் விலை சரிய தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 100 ரூபாய் சரிந்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இன்று 50 ரூபாய் குறைந்து கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... அதேபோல் நேற்று முன்தினம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை நேற்று 20 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 5 ரூபாய் குறைந்து கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... வெங்காயத்தின் விலை 10 ரூபாய் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... மேலும் மற்ற காய்கறியின் விலையும் 10 முதல் 20 ரூபாய் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்...
Next Story