குடும்ப பிரச்சினையில் விரக்தியடைந்த பெண் - கிணற்றில் குதித்து த*கொலை முயற்சி

x

கோவில்பட்டி அருகேயுள்ள குளத்துவாய்பட்டியில் வசித்து வருபவர் கிருஷ்ணவேணி. இவருக்கு கண்ணன் என்பவருடன் திருமணமான நிலையில், சம்பவத்தன்று தம்பதிக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கிருஷ்ணவேனி, அருகேயுள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதில் பெண்ணை பின் தொடர்ந்து வந்த அவரின் கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், மனைவியை காப்பாற்ற அவரும் கிணற்றுக்குள் குதித்திருக்கிறார். தொடர்ந்து, தம்பதி இருவரும் கிணற்றுக்குள் தத்தளிப்பதை பார்த்த அவரின் மகள், அருகில் இருந்த கயிறை கிணற்றில் வீசி இருவரையும் காப்பாற்றிய நிலையில், உடனே தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் போராடி காப்பாற்றி இருக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பானது.

குடும்ப பிரச்சினையில் விரக்தியடைந்த பெண் - கிணற்றில் குதித்து த*கொலை முயற்சி


Next Story

மேலும் செய்திகள்