உலுக்கி எடுத்த கோவில்பட்டி சிறுவன் கொலை - காலில் விழுந்து தாய் கதறல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் எதிர்வீட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரால் கொலை செய்யப்பட்டு இறந்த சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல் கூறினார். மேலும், திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். அப்போது குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சரின் காலில் விழுந்து சிறுவனின் தாயார் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story