உயிரிழந்த வளர்ப்பு நாய்..! கதறி அழும் குடும்பம்.. மருத்துவமனையில் நடந்தது என்ன?

x

உயிரிழந்த வளர்ப்பு நாய்..! கதறி அழும் குடும்பம்.. மருத்துவமனையில் நடந்தது என்ன? | Koavi

கோவையில் வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனியார் கால்நடை மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சரத் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 11 ஆண்டுகளாக சஞ்சு என்ற வளர்ப்பு நாயை வளர்த்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் சரத்தின் தங்கை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அன்று ஒருநாள் வளர்ப்பு நாயை பராமரிக்க ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் செலுத்தி, தனியார் கால்நடை மருத்துவமனையில் விட்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அன்று மாலை வளர்ப்பு நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சரத் குடும்பத்தினர், வளர்ப்பு நாயின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது முறையாக பதிலளிக்காததாக கூறப்படும் நிலையில், போலீசாரிடம் இதுதொடர்பாக புகாரளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்