குடும்பத்தோடு வந்து காவல்துறைக்கு நன்றி தெரிவித்த கோவை தொழிலதிபர்

x

கோவையில் கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுக் கொடுத்த காவல் துறைக்கு தொழிலதிபர் தனது குடும்பத்தினருடன் வந்து நன்றி தெரிவித்தார். துடியலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் சூர்யகுமாரின் 11 வயது மகனை கார் ஓட்டுநர் நவீன், கடந்த 15-ஆம் தேதி கடத்திச் சென்றார். 12 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய அவரை, தனிப்படை போலீசார் பவானி அருகே கைது செய்து, தொழிலதிபரின் மகனை பத்திரமாக மீட்டனர். பணம் கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையால் சிறுவனை நவீன் கடத்திச் சென்றதாக கூறப்படும் நிலையில், 10 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்தார் என்று ஸ்ரீதர் சூர்யகுமார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்