தங்கையுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்.. தம்பியை ஓட ஓட வெட்டிய மைத்துனர்.. வெளியான பகீர் காட்சிகள்..! கோவையில் பயங்கரம்

x

தொண்டாமுத்தூர் அருகே குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் தேவிகா என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட தேவிகாவின் தம்பி ஜெகன்ராஜை, கடந்த ஆண்டு மதன்ராஜ் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்த மதன்ராஜ், மீண்டும் தேவிகாவுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், ஜெகன்ராஜின் அண்ணன் சித்திரைகுமாரும், தேவிகாவின் கணவர் முருகனும், இருசக்கர வாகனத்தில் வந்த மதன்ராஜை மடக்கி, ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த‌தும், 2 பேரும் தப்பியோடினர். தகவலறிந்து சென்ற போலீசார், கை, தாடையில் பலத்த காயமடைந்த மதன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய சித்திரை குமார் மற்றும் முருகனை இருகூர் பகுதியில் போலீசார் கைது செய்தனர். தம்பியை கொலைக்கு பழி தீர்க்க இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்