அலுவலகம் முற்றுகை - டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாக்குவாதம் | Office | TASMAC | ThanthiTV
கோவையில் உள்ள அலுவலகத்தை அரசு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சிலர் முற்றுகையிட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறப்பட்டும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் அலுவலகம், கோவை சாய்பாபா காலனியில் உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சிலர், ஈஸ்வரமூர்த்தியின் அலுவலகத்திற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அனைவரும் கலைந்து சென்றனர். கோவையில் டாஸ்மாக் பார்கள் சில மாதங்களாக, அரசுக்கு பணம் செலுத்தாமல் இயங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story