இந்து - முஸ்லீம்களை ஒன்றிணைத்த பண்டிகை - தமிழகத்தில் தான் இதெல்லாம் சாத்தியம்..!
இந்து - முஸ்லீம்களை ஒன்றிணைத்த பண்டிகை - தமிழகத்தில் தான் இதெல்லாம் சாத்தியம்..!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சியை அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில், ஏராளமான இந்துக்களும், முஸ்லிம்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இந்த ஊர்மக்கள், தீபாவளிக்கு மறுநாள் வெளியூரில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து, அவர்களுக்கு விருந்தளித்து மயிலம் தீபாவளியை விமர்சையாக கொண்டாடினர். இந்த ஆண்டும் மயிலம் தீபாவளி வழக்கம்போல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்ற விழவில், பல்வேறு ராட்டினங்கள், வளையல் கடை, உணவகங்கள், பேன்சி பொருட்கள் கடை திறக்கப்பட்டிருந்தன.
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர்
கை குலுக்கியும், ஆரத்தழுவியும் மயிலம் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மயிலம் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.