சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த கலர்ஃபுல் பலூன் திருவிழா - பொள்ளாச்சியில் கோலாகலம்

x

10-வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா ​​பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆச்சிப்பட்டியில் தொடங்கியது. வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த பலூன் திருவிழாவில் பல்வேறு வகையான வெப்பக்காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன. யானை உருவம் கொண்ட வெப்பக்காற்று பலூன், காற்றின் வேகம் மற்றும் எரிபொருள் தீர்ந்ததால், கேரள பகுதியில் உள்ள வயலில் இறங்கியது. இதில் பயணம் செய்தவர்கள் பாதிப்பின்றி திரும்பினர். இந்நிலையில், 2ம் நாள் பலூன் திருவிழாவில், பைலட்டுகள் முதலில் சின்ன பலூனை வானில் பறக்கவிட்டு, காற்றின் வேகத்தை கணித்தபின் மற்ற பலூன்களை இயக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்