My V3 Ads நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி

x

My V3 Ads நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த நிறுவனம், செல்போன் செயலியில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை கூறி, பொதுமக்களை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பணத்தை இழந்தவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுகளில், உரிய அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றபிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்