Vibe Mode-ல் இருந்த மக்கள்...திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம் - ஹேப்பி ஸ்ட்ரீட்-ல் பரபரப்பு

x

கோவையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், நடனமாடியவர்கள் மீது தடுப்புகள் விழுந்ததால், நிலை தடுமாறி சிலர் கீழே விழுந்து லேசான காயமடைந்தனர். ஆர்.எஸ்.புரம் பகுதியில் இரண்டாவது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் அதிகளவில் கூட்டம் கூடியதால், போலீசாருடன், பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நடன நிகழ்ச்சியின் போது சாலையில் நடனமாடிய பொதுமக்கள் மீது பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட தடுப்புகள் விழுந்தது. இதில் சிலர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனால் அங்கு சில நிமிடம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்