கோவையில் பரபரப்பு.. அதிகாரிகள் முற்றுகை

x

கோவை அருகே மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். புதிதாக அமைக்கப்பட்டு வரும் கோவை மேற்கு புறவழிச் சாலை ஒட்டி உள்ள விவசாய தோட்டங்கள், வீடுகளுக்கு செல்லும் வழியை பாதிக்காதவாறு சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் மனு அளித்து இருந்தனர். இதனை பார்வையிட வந்த அதிகாரிகளிடம், சாலை அமைக்க எடுக்கப்பட்ட இடங்களுக்கு இழப்பீட்டு தொகையை அதிகரித்து தர வேண்டும், தோட்டங்களுக்கு செல்லும் வழியை பாதிக்காதவாறு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்