பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டதும்.. வழிநெடுக அதிர்ந்து பார்த்த கோவை மக்கள்

x

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை கணபதிக்கு கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் திரும்பும் போது கேஸ் டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் 18 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கேஸ் அந்த டேங்கரில் இருந்த நிலையில் பெரும் பரபரப்பான சூழல் கோவையில் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த டேங்கர் லாரியை 3 ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது

மேலும் டேங்கரில் ஏற்பட்டுள்ள உடைப்பு மற்றும் பிரஷர் கே ஜி போன்றவற்றை ஆராய்ந்து பாரத் பெட்ரோலியம் நிர்வாகம் சார்பில் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக கேஸ் மேற்கொண்டு கசியாகவாறு அடைக்கப்பட்டது

மேலும் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது டேங்கர் கொண்டு வந்த லாரியிலிருந்து டேங்கை பிடித்து வரக்கூடிய ஒரு பகுதி கலன்டதால் இந்த விபத்தை எதிர்பாராத விதமாக ஏற்பட்டது தெரியவந்துள்ளது

அதே சமயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேம்பாலத்தை சுற்றி இருக்கக்கூடிய பள்ளிகளுக்கும் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது மேலும் அந்த பாலத்தை சுற்றி போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது

பின்னர் விபத்தான டேங்கில் பழுதடைந்த பகுதியை சீரமைக்க செல்லப்பட்டது பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு குறிப்பிட்ட பகுதியை எடுத்து வந்து மீண்டும் டேங்கில் பொறுத்த பட்டது

அதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று லாரி வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த லாரியில் அந்த டேங்க் சேர்க்கப்பட்டது

பின்னர் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட பாரத் பெட்ரோலியம் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த கருவிகளை கொண்டு கேஸ் கசிவு உள்ளதா என அந்த குழுவினர் ஆராய்ந்து அதனை சரிசெய்தனர்

அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மற்றும் காவல்துறை கமிஷ்னர் சரவணன் சுந்தர்

உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு குழுவினருடன் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்

பின்னர் விபத்தில் விழுந்து மீட்கப்பட்ட கேஸ் டேங்கர் மாற்று லாரியில் போலீஸ் பாதுகாப்புடன் கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்