தாயை இழந்த குட்டி யானை... வேறு யானைக்கூட்டத்துடன் சேர்க்க போராட்டம் | Kovai

x

தாயை இழந்த ஒரு மாத குட்டியானையை யானைக்கூட்டம் சேர்க்க மறுத்த நிலையில், அந்தக்குட்டியை வேறு கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் 2வது நாளாக போராடி வருகின்றனர்... கோவை பன்னிமடை காப்புக்காடு பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் அதன் குட்டியை பொன்னூத்தும்மன் கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் 10 யானைகள் கொண்ட கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த பெண் யானைகள் இந்த குட்டியை இரவு வரை சேர்த்துக்கொள்ளாததால், அந்த குட்டி யானையை வனத்துறையினர் ஜீப்பில் ஏற்றி வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து வேறு கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் 2வது நாளாக போராடி வரும் சூழலில் இன்று மாலைக்குள் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்