பயணிகளை ஏற்றி செல்ல போட்டி..ஆள் இருக்கும் நேரத்தில் பேருந்தை இடித்த ஓட்டுநர்..அதிர்ச்சி காட்சி
கோவையில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஏற்பட்ட போட்டியில், தனியார் பேருந்து மோதி அச்சுறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்ட 2 தனியார் பேருந்துகளுக்கு இடையே, பயணிகளை ஏற்றி செல்வதில் தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு, ஓட்டுநர்களும் நடத்துனர்களும் சண்டையிட்டுள்ளனர். பின்பு பயணிகள் சமாதானம் செய்து அவரவர் பேருந்துகளில் ஏறியபோது முன்னால் நின்ற பேருந்து, பின்னால் நின்ற பேருந்து மீது மோதி அச்சுறுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பயணிகளின் உயிரை துட்சமாக நினைத்து, பேருந்தால் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
