விலகுமா கொடநாடு மர்மம்..? - விடைகளை தேடி திறக்கப்படும் கதவு
கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் அடங்கிய நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கு கடந்த 6 ஆண்டு காலமாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிபதி அப்துல் காதர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆய்வை முழுமையாக வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, சாட்சியங்களை அழிக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Next Story