கொடநாடு வழக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்ளிட்ட 2 பேருக்கும் சிபிசிஐடி போலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை விசாரித்த தனிப்படை காவலர்கள் வேலுசாமி, விஜயகுமார், மகேஷ்குமார் ஆகிய மூவரும் கோவையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், கொடநாடு எஸ்டேட் அருகே வசித்து வரும் அதிமுக பிரமுகர் சங்கர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கபீர் ஆகிய இருவரும் வரும் 27-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.
Next Story