"கொலை" கொடைக்கானலை அதிர வைத்த ஆடியோ
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தில், கள்ளத் துப்பாக்கி புழக்கத்தில் இருப்பதாகவும், கொலை நடந்துள்ளதாகவும் வனக்குழுவின் தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தில் வனக்குழு தலைவராக 5 ஆண்டுகளாக இருக்கும் ஈஸ்வரனை மாற்ற வேண்டும் என்று வனக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அவர் கிராம மக்களுக்கு பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த கிராமத்தில் கள்ளத் துப்பாக்கி பயன்பாடு, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடந்தாலும் தன்னை மீறி அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Next Story