கொடைக்கானல் செல்பவர்களே உஷார் - பயங்கரத்தை கண்முன் காட்டும் வீடியோ
கொடைக்கானல் கீழானவயல் கிராமத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர் கனமழை காரணமாக புலிபிடித்தான் கானல் நீர்த்தேக்கம் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் வெளியேறியது. மரங்கள் வேரோடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாலம் உடைந்ததால் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், கீழானவயல் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படை பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story