உடலில் சேறு பூசிக்கொள்ளும் விநோத திருவிழா - ஆடிப்பாடி கொண்டாடிய ஆண்கள்

x

தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன்-பட்டாளம்மன் கோயில் திருவிழாவின் முதல் நாளில் சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தாண்டிக்குடி ,மங்களம் கொம்பு, பட்லாங்காடு, கொடலங்காடு, பண்ணைக்காடு, அரசன் கோடை, காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களை சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அடித்தும், சேற்றை பூசி சேத்தாண்டி வேடம் பூண்டும் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வழிபட்டனர். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த வினோத திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்த‌ர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்